மாஸ்டர் படத்தை தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் , பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி .
அடுத்து அவர் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் . விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். அவர் அடுத்து நடிக்க உள்ள படத்தில் "பட்டாக்கத்தி " ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்பதால் , பிறந்தநாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டுவது போல புகைப்படங்கள் வெளியாகின.
இச்செயல் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதால் , இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்றும் , யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் .
பின்னர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்
0 Comments